கொம்புச் சந்தி வீதிக்கு 02 மில்லியன் நிதி ஒதுக்கீடு…

பா.உ ஸ்ரீநேசன் முயற்சியால் களுதாவளை கொம்புச் சந்தி வீதிக்கு 02 மில்லியன் நிதி ஒதுக்கீடு…






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாரளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுதாவளை கொம்பச் சந்தி வீதி புனரமைப்பிற்காக ரூபா 02 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி புனரமைப்பு வேலைகளைப் பார்வையிடுவதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடம் விஜயம் மேற்கொண்டார்.

பல வருடங்களாக பாதிப்புற்று குன்றும், குழியுமாக காணப்பட்ட இவ்வீதி நிலைமைகள் தொடர்பில் களுதாவளை மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரால் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வீதி புனரமைக்கப்படும் பட்சத்தில் மேற்படி வீதியினை அன்றாடம் பயன்படுத்துவதற்கு அசௌகரியங்களை எதிர்கொண்ட மக்களின் போக்குவரத்துக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்பது நிதர்சனம்.