புதிய தையல் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது


 (லியோன்)


மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோரினால் மாநகர சபையின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களின்  கீழ்  பெண்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


இதற்கு அமைய  பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு  திட்டமாக ஆறுமாத தையல் பயிற்சிகளை வழங்கி அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன , 

இந்த கீழ் தையல் பயிற்சிகளை வழங்குவதற்காக மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை தொகுதியில் தையல் பயிற்சிக்கான நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கே சத்தியசீலன் ,மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன்  மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , மாநகர சபை நிர்வாக  உத்தியோகத்தர்கள்   கலந்துகொண்டனர்