தமிழர்கள் மத்தியில் ஓரு தலைமுறை இடைவெளியுள்ளது –மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஆதங்கம்

தமிழ் சமூகம் மத்தியில் எழுத்து துறையில் ஒரு தலைமுறை இடைவெளி காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான தொடர்பாடல் மற்றும் ஊடகம் தொடர்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

அரச தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்;ட தகவல் திணைக்கள உத்தியோகத்தர் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபாரன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வினை கிழக்கு பல்கலைக்கழக ஊடக கற்கை பிரிவு விவுரையாளர்களான திருமதி சி.சிவப்பிரியா மற்றும் செல்வி அனுதர்சினி,சிரேஸ்ட ஊடகவியலாளர் பூ.சீவகன் ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் ஊடகத்துறையினை கற்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர்,
ஊடகத்துறை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது ஊடக ஓழுக்கம் என்னும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்படும்போது ஊடகத்துறை ஒரு சிறந்த துறையாக கருதப்படும்.

நவீன தொழில்நுட்பம் விரைவான முறையில் வளர்ச்சியடைந்துவருவதன் காரணமாக அவற்றில் தேவையான பலன்தரும் விடயங்களைக்கற்றுக்கொள்ளவேண்டும்.

எழுத்து துறையில் மாணவர்கள் அதிகளவு அக்கரை செலுத்தவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் எழுத்து துறையில் சமூக ரீதியாக எழுத்து துறையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.தமிழ் சமூகம் மத்தியில் எழுத்து துறையானது ஒரு தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது.

ஒரு எழுத்தாளர் மரணிக்கும்போது அவர் விட்டுச்சென்ற பணியை தொடர யார் இருக்கின்றார் என்று தேடவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

மாணவர்கள் எந்த துறைக்கு சென்றாலும் அவர்கள் தங்களது எழுத்தாற்றல்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.