புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பொது நிலையினரின் முதல் சமூக பணி


(லியோன்)

தேசிய கத்தோலிக்க பொது நிலையினர் ஆணைக்குழு ஒக்டோபர் 14ஆம் திகதியை "பொது நிலையினர் ஞாயிறு" தினமாக பிரகடனம் செய்துள்ளனர்.



பரிசுத்த பாப்பரசர் பொதுநிலையினரை "மாற்றத்தின் முகவர்களாக கத்தோலிக்க திருச்சபையினுள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்

இந்த அழைப்பினை தேசிய பொது நிலையினர் ஆணைக்குழுவின் தலைவர் பதுளை மறைமாவட்ட ஆயர்  வின்ஸ்டன் பெர்னாண்டோ , ஆண்டகை ,செயலாளர் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெயான்ஸி மென்டிஸ் ஆண்டகை  ஆகியோர்  இணைந்து தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்

இந்த அழைப்பின் ஊடாக  பொதுநிலையினர் தமது குடும்பங்களிலும் பங்கு தளங்களிலும் சமூக மட்டங்களிலும். மறைமாவட்டங்களிலும்,  தேசிய மட்டத்திலும், உலகளாவிய ரீதியாகவும் ,மறைபரப்பு, சமூக அநீதி, எளிய வாழ்க்கை முறை ,சமூகச் சீரழிவு, கலாச்சாரம், சமூகநலன் சார்ந்த விழிப்பூட்டல் போன்ற பலதரப்பட்ட துறைகளில் அர்ப்பணிப்புடன் மாற்றத்தின் முகவர்களாக பணியாற்றி கத்தோலிக்க திருச்சபையை வலுப்படுத்த தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழு இன்றையத் தினத்தில் அழைப்பு விடுக்கிறது.

இந்த தேசிய பொது நிலையினர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில்   திருவுரைப்பணி சபை கண்டி தேசிய குருமார் விரிவுரையாளர் அருட்பணி டேவின் குஞ்சே  தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பொது நிலையினரின் முதல் சமூக பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இதன் முதல் சமூக பணியாக புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூக ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குரையினை நிவர்த்தி  செய்யும் வகையில் இரத்ததான நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது