முனைப்பு நிறுவானத்தினால் வாகரை மாவாடியோடையில் இலவச பிரத்தியேக கல்வி நிலையம் ஆரம்பம்.                   முனைப்பு நிறுவானத்தினால் வாகரை மாவாடியோடையில் இலவச பிரத்தியேக கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

        மாங்கேணி மற்றும் மாவடியோடை பிரதேசத்தில் உள்ள வாறிய மாணவர்கள் பிரத்தியோக வகுப்பு வசதியின்மை மற்றும் போக்குவரத்துப் பிரச்சினை வறுமை காரணமாக பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் வீணாக பொழுதை கழிப்பதனால் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

          இதனை அவதானித்த முனைப்பு நிறுவனம் குறித்த பகுதி மாணவார்களின் நலன் கருதி மாவடியோடையில் பிரத்தியேக கல்வி நிலையம் அமைத்து தரம் 1 முதல் தரம் 11 வாரையான மாணவார்களுக்கு  ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தமிழ் உட்பட அனைத்துப் பாடங்களையும்  இலவாசமாக  கற்பிப்பதற்கான வசதிகளுடன்  ஆரம்பித்து வைத்துள்ளது.

                இந் நிலையத்தினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவான நிருவாகிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.

              முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவன ஆலோசகர் க,புஸ்பராசா அவர்களது தலைலையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.