03வது பௌர்ணமி கலை விழா, மட்டக்களப்பு நகரில்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 03வது பௌர்ணமி கலை விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன…

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் முகமாக மாதாந்தம் பௌர்ணமி கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும், மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து நடாத்தும் மூன்றாவது பௌர்ணமி கலை விழாவானது இம்மாதம் 24 ஆம் திகதி மாலை 05.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் மாநகரசபை கலை கலாசார குழுவின் தலைவரும், மாநகர உறுப்பினருமான வே.தவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

மாநகர முதல்வர் தி.சரவணபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரீகாந், மாநகர ஆணையாளர் ந.மணிவண்ணன் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பில் மருவி வரும் தமிழர்களின் கிராமிய மற்றும் கலாச்சார நடனங்கள், பறங்கிய இனத்தவர்களின் கபறிஞ்சா நடனங்கள், கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் மாணவி செல்வி துர்க்கா அவர்களின் கதை காலாட்சேபம் மற்றும் நகைச்சுவை நாடகம் என்பன மேடையேற்றப்படவுள்ளது. மேலும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கதை மாமணி மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் அதே சாயலில்  கதை கூறிவரும் அவரது இளவல் சக்திஷரூபன் அவர்களும் கதை கூறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.