விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருச்சடங்கு திருக்கதவு திறத்தலுடன் இரவு ஆரம்பமானது.




(விளாவூர் நிருபர்)

கிழக்கிலங்கையின் மிகவும்  பிரசித்திபெற்றதும் இலங்கையில் முதன்முறையாக ஆறு அடி உயரமான கருங்கல் திருவாசியுடன் மூல விக்கிரகம் அமையப்பெற்ற மட்டக்களப்பு,விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று (20.09.2018) இரவு  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

இரவு 11மணிக்கு ஆரம்பமான திருக்கதவு திறத்தல் பூஜையின் ஆரம்பத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் இடம்பெற்று பின்பு அலங்கார பூஜைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து உள் வீதியுலாவும் இடம்பெற்றது.

ஐந்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பச்சடங்கும்,திங்கட்கிழமை இரவு பள்ளயச்சடங்கும்,செவ்வாய்க்கிழமை அதிகாலை தீமிதிப்பு சடங்கும் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவ வழிபாட்டு முறைகளையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் கொண்டதாக ஆலயத்தின் திருச்சடங்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது