மைக்கேல் எங்கள் தாய்வீடு –அதிர்ந்தது மட்டக்களப்பு நகர்

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 07 மைக்வோக் நடைபவனி இன்று சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் 145வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள்,பாடசாலை சமூகம் என்பன இணைந்து இந்த நிகழ்வுகள் ஏழாவது ஆண்டாகவும் இன்று நடைபெற்றது.

பாடசாலை முன்பாக ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்றது.


அதiனைத்தொடர்ந்து ஆடல் பாடல்கள் மற்றும் பல்வேறு வழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாகசென்றனர்.

திருமலை வீதியுடாக தாண்டவன்வெளி சந்தி வரையில் சென்று மீண்டும் திருமலை வீதியுடாக அரசடி சந்திவரையில் சென்று மீண்டும் பாடசாலைக்கு நடைபவனி வந்தடைந்தது.

இந்த நடைபவனியில் அருட்தந்தையர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்;டனர்.