அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருச்சடங்கு பெருவிழா இறுதி நாள் இரவு விழாக்கோலமானது விளாவட்டவான்.




(விளாவூர் நிருபர்)

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும் இலங்கையில் ஆறு அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற முதல் ஆலயம் எனும் பெருமையினை கொன்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருச்சடங்கு பெருவிழாவின் இறுதி நாள்  (பள்ளையச் சடங்கு) விளாவட்டவான் பொதுமக்களால் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இறுதிநாள் (24.09.2018)  இரவினை சிறப்பிக்கும் வண்ணம் இரவு 8:30 மணிக்கு விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து  பூம்பந்தல் பவனி ஆரம்பமானது
இந்த நிகழ்வில் ஸ்ரீ கணேஷா அறநெறிப் பாடசாலை மாணர்கள், கவின் கலைக் கழகத்தின் கலைஞர்கள்,  ஆகியோரால் நகரும் கலைக் கண்காட்சியும் ஸ்ரீ கணேஷா இந்து இளைஞர் மன்றத்தினரால் பக்தி பாடலுக்கான நடணங்களும் இடம்பெற பெண்கள் கற்பூர சட்டி ஏந்திவர சிறப்பான முறையில் அன்னையின் பூம்பந்தல் பவனி சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு மங்கள விழக்கேற்றல்,இறைவணக்கம் இடம்பெற்று தெடர்ந்து விளாவட்டவான் ஸ்ரீ கணேஷா இத்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டுநகர் "ஆராதனா" இசை குழவினரின் இசை முழக்கம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளை பெரும்திரளான மக்கள் பார்வையிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.