பட்டிருப்பு ஸ்ரீ ஞானசக்தி வாலை அம்பாள் ஆலய விஷக்கல்லின் அபிஷேக ஆராதனை


    (லியோன்)

மட்டக்களப்பு – பட்டிருப்புத் தொகுதியின் கண்ணே அமைந்துள்ள அம்பிளாந்துறை  ஸ்ரீ ஞானசக்தி வாலை அம்பாள் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  விஷக்கல்லின்  22வது வருடத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை சக்தி பூஜையும் வாலை ஜோதிடமும் இடம்பெறவுள்ளது .


26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள இந்த விசேட அபிஷேக ஆராதனை சக்தி பூஜை நிகழ்வில் பக்த அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ ஞானசக்தி வாலை அம்பாளின் அருளை பெற்று செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.