திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் செயல் திட்டம் தொடர்பான மாணவர்களுக்கான செயலமர்வு


(லியோன்)

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனமான ஜெயிக்க தொண்டு நிறுவனம் இலங்கை அரசுடன் இணைந்து தேசிய ரீதியில் திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் வேலைத்திட்டங்களை  நடைமுறைப் படுத்தி வருகின்றது .


இதன்கீழ் மேல்மாகாணம் ,சுற்றாடல் திண்மக் கழிவு முகாமைத்துவ அதிகார சபை ,கொழும்பு மாநகர சபை , கல்கிஸ்சை மாநகர சபை ,  கல்முனை மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து  திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் வேலைத்திட்டங்களை  நடைமுறைப் படுத்தி வருகின்றது .

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இனைந்து செயல்படும் ஜெயிக்க தொண்டு நிறுவனம் திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் வேலைத்திட்டங்களை  ஆரம்பித்துள்ளது

இதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 29 பாடசாலை மாணவர்களுக்கான திண்மக் கழிவுகளை முகாமைத்துவ படுத்தும் செயல் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு சுற்றாடல் அதிகார சபையின்  சுற்றாடல் உத்தியோகத்தர் கே .லோகராஜா  மற்றும் மட்டக்களப்பு கல்விவலய அலுவலக அதிகாரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் , ஜெயிக்க தொண்டு நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்