முனைப்பினால் நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை.


 தாந்தாமலை நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால் விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் ஆண்கள் கிறிக்கட் அணி சிறந்த அணியாக உள்ள போதும் மாவட்ட மட்டப் போட்டிக்கோ மாகாண மட்டப் போட்டிக்கோ செல்வதற்கு சீருடை வசதி இல்லாது காணப்பட்ட நிலையில், முனைப்பு நிறுவனத்தினால் குறித்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

 முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார், நிறுவனத்தின் செயலாளர், பொருளாலர் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து சீருடைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.