“நோய்நாடி நோய்முதல் நாடி “ புற்று நோய் நூல் வெளியீட்டு நிகழ்வு


(லியோன்)

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் “நோய்நாடி நோய்முதல் நாடி “ எனும் தலைப்பின் கீழ் புற்று நோய் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது


இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வைத்தியர் சயலொளிபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய நூல் ஆசிரியர் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் நடராஜா ஜெயகுமாரன்  கருத்து தெரிவிக்கையில்  

புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது .இவ்வாறாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாது கனசமானோர் மிக்கவும் பிந்திய  நிலையிலே இனங் காணுகின்றனர் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல நவீன மயமான சிகிச்சைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன .

ஆரம்ப நிலையில் இனங்காணப்படும் புற்றுநோயையே பூரணமாக குணமாக்க உதவும் இதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக “நோய்நாடி நோய்முதல் நாடி “ எனும் தலைப்பின் கீழ் புற்று நோய் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளதாக  நூல் ஆசிரியர் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் நடராஜா ஜெயகுமாரன் தெரிவித்தார்

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வைத்தியர் சயலொளிபவன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் வி .விவேகானந்தராஜா , சிறப்பு அதிதிகளாக லயன் அருணகிரிநாதர் வைத்தியர் கே .யோககாந்தி மற்றும் வைத்தியர்கள் ,லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , மருத்துவ பீட மாணவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,கலந்துகொண்டனர்