ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு


(லியோன்)

ரக்ஸாபந்தன்  இறையன்புக்கும் பாதுகாப்புக்குமான பிணைப்பினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில்  நடைபெற்றது
.

இந்நிகழ்வில் பிரதம ஆன்மீக அதிதியாக இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரம்ம குமாரிகள்  உலக ஆன்மீக பல்கலைகழக மின்னியல் மற்றும் மின்னியந்திரவியல் துறை சார்ந்த பொறியியல் பட்டதாரி ஆன்மீக ஆசிரியர் ஆன்மீக சகோதரி பி கு .ஜெயலட்சுமி கலந்துகொண்டார்

மட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைய பொறுப்பாளர் சகோதரர்  கே சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற  ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் அணிவிக்கும் நிகழ்வில் மின்னியந்திரவியல் துறை சார்ந்த பொறியியல் ,ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி கு .ஜெயலட்சுமியின்  ஆன்மீக சொற்பொழிவும் ,தியானமும் இடம்பெற்றன .

மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில்  நடைபெற்ற ரக்ஸாபந்தன் பண்டிகை புனித நூல் கட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் , மட்டக்களப்பு வர்த்தக சங்க அங்கத்தவர்கள் , பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலை சகோதரர்கள் ,நிலைய சகோதரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்