மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கைதிகள் தின நிகழ்வு


(லியோன்)


ஸ்ரீ லங்கா சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்  மற்றும் ஸ்ரீ லங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியில் சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் சிறைக்கைதிகளின் தினத்தை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விசேட நிகழ்வுகள்  இடம்பெற்று வருகின்றன 


மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் சிறப்பு  வாரமாக நடைமுறை படுத்தப்பட்டு சிறைச்சாலை பிரதம  ஜெயிலர் மோகன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டன   இதன் கீழ் சிறைக்கைதிகளின் குடும்பவாரமாக  சிறப்பு நிகழ்வுகள்  இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது .

சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க தலைவர்  வைத்தியர் கே .கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கைதிகள் தின  நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,கலந்துகொண்டார்

கைதிகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் ,புலமைப்பரில் ,பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளின் பிள்ளைகளுக்கு வங்கியில்  சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகங்களும், கற்றல் உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை  நலன்புரிச் சங்க  செயலாளர் . வி . தர்ஷன்   ,ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரன் , மட்டக்களப்பு லயன்ஸ் கழக  தலைவர் செல்வேந்திரன், மட்டக்களப்பு சென்ட் ஜோன்ஸ் அபுலன்ஸ்  தலைவர் , மீரா சாயிபு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்  உறுப்பினர்கள் ,இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தின் ,உறுப்பினர்கள் ,  மட்டக்களப்பு லயன்ஸ் கழக  உறுப்பினர்கள் , கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .