மட்டக்களப்பின் சரித்திர இடத்தில் நடைபெற்ற ஆரம்பமான உற்சவம் -படையெடுக்கும் பொதுமக்கள்

இலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு குசலானமலை குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இரவு ஆரம்பமானது.

2000ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் சோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆலயமாகவும் இதுவுள்ளதாக இங்குள்ள வரலாற்று எச்சங்கள் காட்டுகின்றன.

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் குறித்த ஆலயம் தொடர்பான வரலாறுகள வெளிவராத நிலையில் தற்போது இந்த மலையினை நோக்கி மக்கள் செல்லும் நிலையுள்ளது.

இயற்கையின் உரைவிடமாகவும் காடும் காடுசார்ந்த இடமாகவும் மலைசார்ந்த குறிஞ்சி மக்கள் வாழும் பகுதியாகவும் குசலானமலை பிரதேசம் காணப்படுவதுடன் எழில்கொஞ்சும் மலையில் முருக வழிபாடு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு செங்கலடியில் இருந்து பிற்பகல் ஆலய உற்சவத்திற்கான வேல்கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மலைக்கு வேல்கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசேட அபிசேக ஆராதனைகள் யாகபூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

நீண்டகால பாரம்பரியத்திற்கு அமைவாக கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 09ஆம் திகதி ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வரலாற்றுசிறப்புமிக்க தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.