வெளிநாட்டு பிரஜைகளின் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய சிறுவர்கள் கைது


 (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம் – பாலமீன் கடற்கரை பகுதியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர் யுவதி  இருவர் தமது பயண பைகளை கரையில் வைத்துவிட்டு  கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அப்பகுதியில் உலாவிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் தமது பயணப்பையில் இருந்து 6000 ஆயிரம் ரூபா பணத்தையும்   ,80  மற்றும்  25 ஆயிரம் பெறுமதியான இரண்டு கையடக்க  தொலைபேசிகள்  திருடி சென்றதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
.

குறித்த வெளிநாட்டு பிரஜைகள் செய்துள்ள முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி தயா தீகா வதுர தலைமையிலான பொலிஸ் புலனாய்வு  குழுவினர்  மட்டக்களப்பு பொலிசார் முகத்துவாரம் ,பாலமீன்மடு , திராய்மடு ஆகிய பகுதிகளில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்

இதன்போது திராய்மடு பகுதியை சேர்ந்த 13  மற்றும் 16  வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசிகள் இரண்டையும் , 3745 /=  ரூபா பணமும் மற்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

 கைது செய்யப்பட்ட  இரண்டு சிறுவர்களையும் மற்றும் திருடப்பட்ட பணம் இரண்டு தொலைபேசிகள் மற்றும் கைப்பை என்பன  நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் 

குறித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளான  ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர் யுவதி   இருவரும் அந்நாட்டில் உயர்கல்வியினை கற்கும் மாணவர்கள் எனவும் , இவர்கள் சுற்றுலா பயனத்த மேற்கொண்டு இலங்கை - மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்