கொக்குவில் சேமகாலையில் சிரமதான பணிமட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட கொக்குவில் சேமகாலையில் சிரமதானப் பணிகள் புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் மாநகர சபை மேயரிடம் கொக்குவில் சேமக்காலை பற்றைக் காடாக உள்ளதால் இதனை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து மாநகர சபையின் உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் சிரமதான பணிகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையில் கிடைத்தமையினால் தான் பல பிரதேசங்கள் தற்போது முன்னேற்றம் கண்டு வருவதாக மாநகர சபையின் உறுப்பினர் க.ரகுநாதன் இதன்போது தெரிவித்தார்.