முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு


(லியோன்)


கிழக்கு மாகாண பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்தி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது ,


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பிரதேச செயலக தமிழ்மொழி மூல முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி  மாவட்ட இனைப்பாளர் வி . முரளிதரன் ஒழுங்கமைப்பில்   மாவட்ட உதவி செயலாளர் எ .நவேஸ் வரன் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் செயலமர்வில் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் திருமதி பாரதி ஹெனடி கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார் .

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமிய பங்குபற்றுதலில் பரிமாறிக் கொண்டிருக்கின்ற மூலத்துவங்கள் , குழு உறுப்பினர்களின் கடமைப் பொறுப்புக்கள் , கிராமிய பங்கு பற்றுதலின் முக்கியத்துவம் , கிராமிய பங்குபற்றுதலின் அடிப்படையான வழிகாட்டல்கள் மற்றும் அவற்றை பிரயோகித்தல்  போன்ற விடயங்கள் விரிவுரைகள் வழங்கப்பட்டது

இன்று நடைபெற்ற ஒருநாள் செயலமர்வில் திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய பிரதேச செயலகங்களின் கடைமையாற்றும் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்