ஸ்ரீநேசனின் முயற்சியால் உன்னிச்சையில் 42 மில்லியன் செலவில் அரிசி ஆலை படுவான்கரை விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் பிரதேச மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் 42 மில்லியன் (4.2 கோடி) செலவில் அரிசி ஆலை ஒன்றினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி ஆலையினை அமைப்பது மற்றும் அதனை தொடர்ந்து நடத்திச் செல்வது தொடர்பான கலந்த்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், ,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ,மாவட்டச் செயலக பொறியியலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,மண்முனை மேற்கு பிரதேச செயலக திட்டநிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அரிசி ஆலையின் நிருமாணப்பணிகளை விரைவில் ஆரம்பித்து குறுகிய காலத்தில் உற்பத்தியினை தொடங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

நிருமாணிக்கப்படவுள்ள இந்த அரிசி ஆலையின் மூலம் அரிசி உற்பத்தி மட்டுமல்லாது, அரிசி மா மற்றும் பல பெறுமதிசேர் பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கிரான் பிரதேசத்திலும் அரிசி ஆலை ஒன்றினை அமைப்பதற்கான முன்மொழிவு ஒன்று தற்போது அமைச்சின் நடவடிக்கையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.