மீன்பிடிக்கச்சென்ற இளைஞர்கள் -நீரில் மூழ்கி இளைஞர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லாவெளிகுளத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுணதீவு,சிறுவாமுனை பகுதியை சேர்ந்த சிவனேசன் விமல்ராஜ் என்னும் 24வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை வவுணதீவு பிரதேசத்தில் இருந்து ஏழு இளைஞர்கள் குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் சகதியில் சிக்குண்டு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.