வெளிமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுக்கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு சென்று கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண வெளி மாகாண ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணிக்கு மட்டக்களப்பு,அரசடி ஸ்ரான்டட் கல்வியகத்தில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண வெளி மாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் பங்குபற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக கிழக்கு மாகாண வெளி மாகாண ஆசிரியர் சங்கம் செயற்பட்டுவரும் நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார்.