30 வது தேசிய விளையாட்டுப்போட்டி மட்டக்களப்பில்.






தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  30 வது இளைஞர் விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் 2018 ம் வருடத்திற்க்கான எல்லே போட்டிகள் இம்முறை  மட்டக்களப்பு நகரில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (22.08.2018)  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் உதவிப்பணிப்பாளர் ஹாலித்தின் ஹமீர் தலைமையில்  நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தர்மகீர்த்தி உக்வத்தை , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் M l M N ,நைறூஸ், மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன்,   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசிர குமார, ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண  நிருவாக உத்தியோகஷ்தர் , கணக்காளர்,  அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், நிஸ்கோ முகாமையாளர் , மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர்,  மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளினதும் இளைஞர் சேவை அதிகாரிகள், தேசிய சம்மேளன பிரதிநிதி எஸ். திவாகர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ம.சுரேஸ்காந்   மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாகிகள்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 07,08,09 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு வெபர்,மற்றும்  கல்லடி சிவானந்தா மைதானங்களில் போட்டிகள் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை போட்டிகளில் 25 மாவட்டங்களிலிருந்தும் 26 ஆடவர் அணியும் 26 மகளீர் அணியும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.