சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கல்லடி

மட்டக்களப்பு,கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு பெருமைசேர்ந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில இருந்து தேசிய தமிழ் மொழி தின போட்டிக்கு சென்று மூன்றாம் இடத்தினை ஒரு மாணவி பெற்றுக்கொடுத்துள்ளதுடன் உயர்தரத்தில் சித்திபெற்று இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ரி.ராஜமோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தினை சேர்ந்த பிரதி பணிப்பாளர்களான ரி.யுவராஜா,ஜே.பிரபாகரன் ஆகியோரும் மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி கே.அருள்பிரகாசமும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

தேசிய தமிழ் மொழி தின போட்டியின் சிறுகதை ஆக்கப்போட்டியில் நான்காம் பிரிவில் உ.சாந்தரூபி என்னும் மாணவி மூன்றாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துளளார்.அதேபோன்று உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில 2018ஆண்டு பல்கலைக்கழக அனுமதியை ம.சஜீவினி,சு.சுதேஸ் ஆகியேர்ர் பெற்றுள்ளனர்.

பாடசாலைக்கு பெருமை சேர்ந்த இந்த மாணவர்கள் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலை வரையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து பாடசாலையில் குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தேசிய தமிழ் மொழி தின போட்டியின் சிறுகதை ஆக்கப்போட்டியில் நான்காம் பிரிவில் உ.சாந்தரூபி என்னும் மாணவி மூன்றாம் இடத்தினைப்பெறுவதற்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியை திருமதி ரி.சிவகுமாரும் இதன்போது பாராட்டப்பட்டார்.

இந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள்,பாடசாலை அபிவிருத்தி சங்கள பிரதிநிதிகள் ,பெற்றோர் என பல தரப்பட்டவர்களும கலந்துகொண்டனர்.