காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு



காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபத்தில் 10.08.2018 அன்று மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட காணிச்சீர்திருத்த அதிகாரசபை பணிப்பாளர் திரு.நே.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் பிரதம அதீதிகளாக திரு.நிஹால் விஜேதுங்க, செயற்திட்ட பணிப்பாளர் தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் திரு. துசார வன்னிநாயக்க, பணிப்பாளர் நில அளவை தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு , மற்றும் களுதாவளை கிராம சேவையாளர் கிராம தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முதற்கட்டமாக உறுதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மூன்று மாதகாலத்திற்ள் சுமார் 1000 உறுதி வழங்கும் நிகழ்வு இதே மண்டபத்தில் மிக விரைவில் தவிசாளர் தலைமையில் நடைபெறும் எனவும் மாவட்ட பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.


இவ் உறுதி வழங்களானது மாவட்ட பணிப்பாளரின் நீண்ட பிரயத்தனத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.