வெல்லாவெளி பன்குளம் ஆழமாக்கும் பணி



(படுவான்எஸ்.நவா)
வெல்லாவெளி பன்குளம் ஆழமாக்கும் பணி

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தில் நீண்ட காலமாக இளுபறியாக இருந்த பன்குளம் ஆழமாக்கும் வேலைத்திட்டம் விரன்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தின் நிதி உதவியுடன் (03)ஆகஸ்ட் இன்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களினால்  சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஆனைக்காரன்வெளி கண்டம்  அறுபத்து மூன்று ஏக்கர் நெற்காணி இதனை நம்பி வாழ்கின்ற விவசாய்கள் இக்குளத்தின் மூலம்; பல நன்மையடைகின்றனர் இதேபோன்று வரட்சி காலங்களில்  இக்கிராமத்திற்கு குடிநீர் மற்றும் பாவனைக்குரிய நீர் தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு இதனால் பல துன்பங்களையும் கஷ்ரங்களையும்  அனுபவித்துக்கொண்டு வருகின்றனர்.
இக்குளத்தில் தொடர்ந்து நீர் இருக்குமானால் இங்குள்ள கிணறுகள் நீர் வற்றாமல் இங்குள்ள உயிர்வாழ் மிருகங்கள் கூட நன்மையடையும் வளப்புமீன்கள் வளக்கலாம் இதனால் பலர் நன்மையடைவார்கள் இதன்காரணமாக இக்குளத்தினை ஆளமாக்கி போதியளவு நீரை சேமித்துக்கொள்ள வேண்டும்; எனவும் ரீ-10-2 நவகிரி வாய்க்காலினையும் புனரமைத்து தாருங்கள் என நீண்டகாலமாக இம் மக்கள் கோரியிருந்தனர் இதனடிப்படையில் பல தடவை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் எடுத்தக்கூறியிருந்தும் உரியகாலத்தில் இதனை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் கவலையடைந்தனர்.
எனவே தற்போதுள்ள பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி அவர்களின் விடாமுயற்சியின் உத்வேகத்தின் காரணமாகவும்; முதற்கட்டமாக  குளம் ஆழமாக்கும் பணியினை விரன்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தின் நிதி உதவியுடன் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக  கிராமமக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந் நிகழ்வின் போது உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உதவித்திட்டமிடப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் விரன்டினா அபிவிருத்திச் சேவையின் திட்ட உதவியாளர் கே.திலக்ஷன் கிராம சேவக உத்தியோகத்தர் திரு.சக்திவேல் மற்றும் சக்தி கமநல அமைப்பின் தலைவர் பி.சிவநேசராசா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.