மண்முனை மேற்கில் இளம் தலைவர்களுக்கு வலுவூட்டும் பயிற்சி முகாம் ....



கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர்விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரனையில்,  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிராம மட்ட இளம் தலைவர்களுக்கு வலுவூட்டும் பயிற்சி முகாம்  ஒன்று மண்முனை மேற்கு பிரதேசத்தில்  முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 03,04,05/08/2018 ,( வெள்ளி, சனி, ஞாயிறு) அகிய தினங்களில்  குறிஞ்சாமுனை பாடசாலையில் மூன்று நாள் வதிவிடமாக  நடைபெறவுள்ள இந்த இளைஞர் பயிற்சி முகாம் வேலைத்திட்டத்தில் 60 இளைஞர் யுவதிகள் பயிற்சியளிக்கப்படவுள்ளனர்.

"இளைஞர்கள் சமூக பொறுப்பாளராகும் " எனும் தலைப்பில் இளைஞர்களுக்கு சமூகம் தொடர்பாக ஒழுங்கமைப்புவலிமை, படைப்பாற்றலை வளர்ச்சி செய்யும் வலுவூட்டல்களோடு,

இளைஞர்கள் தமது ஆற்றல் மற்றும் திறமைகளை அன்னியொன்னியமாக  அறிந்து கொள்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் இளைஞர்களின் தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சிக்கும் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்குமான வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்குவது இந்த பயிற்சி முகாமின் பிரதான நோக்கமாக உள்ளது என வேலைத்திட்டத்தின் ஏற்பாட்டாளரான பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எமது செய்திப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.

 துறைசார் நிபுணத்துவமுடைய வளவாளர்களால் விரிவுரைகள் மற்றும் யோகா பயிற்சிகளும் இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.