களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு விழா

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தலைமையில் இடம் பெற்றன அந்த வகையில் வைத்தியசாலையில் அமைந்துள்ள முருகள் ஆலயத்தில் விசேட பூஜையும் அதனை தொடர்ந்து மர நடுகையும் மற்றும்   இரத்ததான முகாம் வைத்தியசாலையில் நடைபெற்றது


இந்த இரத்ததான முகாமில் பொலிசார்இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் பொதுமக்கள்அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் இரத்தத்தை தானம் செய்தனர்.
இரத்த தானத்தில் சேகரிக்கப்பட்ட இரத்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் இரத்த வங்கியில் களஞ்சியப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் சகலவிபரங்களும் கணினி மயப்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு விசேட இலத்திரனியல் அட்டை வளங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.