வெற்றிகரமான விவசாயத்திற்கு புதிய திட்டங்கள்


(லியோன்)

வெற்றிகரமான விவசாயத்தை வெற்றிக்கொள்ளும் புதிய திட்டங்கள் தொடர்பான மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய விவசாய திட்டங்கள் ,பாரம்பரிய உணவு உற்பத்தி , மூலிகை வகைகள் உற்பத்தி , விவசாய கால நிலைக்கு ஏற்ப விவசாய  தொழில் நுற்பங்களை அறிமுகப்படுத்தல் ,மற்றும்  வருட முழுவதும் விவசாய நிலத்தை பயன்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் தொடர்பாக பயிற்சியுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .  

இதன் எதிர்கால திட்டமாக  பாடசாலை வளாகம்  , வைத்தியசாலை வளாகம்  , முப்படைகளின் முகாமை அன்றிய வளாகம் மற்றும் நகர் புறங்களில் நஞ்சற்ற உணவு உற்பத்திகள் , பாரம்பரிய பழம் வகைகள், நவீன  பழமரங்கள் உற்பத்திகளை ஊக்குவித்தல் அதற்கான செயல் திட்டங்கள் தொடர்பாகவும். மாவட்ட விவசாய திணைக்களங்கள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலாகவும் நடைபெற்றது  

பயிற்சியுடனான கலந்துரையாடல்  நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த விஞ்ஞானி மனோகரன் கிருஷ்ணா பயிற்சி வளவாளராக கலந்துகொண்டார்

மாவட்ட விவசாய பணிப்பாளர் யாசிம் பாபா இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியுடனான கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்கப்ப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் , மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர்க , திணைக்கள அதிகாரிகள் அதிகாரிகள் ,,பிரதேச செயலாளர்கள் ,கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர் .