Breaking News

கல்மடு ஆற்றிற்குக் குறுக்கே சிறிய பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…


சந்தன மடு ஆற்றின் பிரதான வீதியில் உள்ள வேரம், கல்மடு ஆற்றிற்குக் குறுக்கே பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் மேற்படி பிரதேசத்தில் இடம்பெற்றது.

மேற்படி பாலம் அமைப்பது தொடர்பில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை உறுப்பினர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டமைக்கமைவாக இன்றைய தினம் இப்பிரதேசத்திற்கான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல் என்பன இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் போது மக்களினால் சந்தனமடு ஆற்றிற்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் இந்தக் கல்மடு வேரம் பிரதேசத்தில் கல்மடு ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட வேண்டிய பாலமானது மிகவும் பயன்மிக்கதாக அமையும். ஏனெனில் இவ்வாற்றினைக் கடந்து ஈரளக்குளம், இலுக்குப்பொத்தானை, பெருமாவெளி, பெரியவெட்டவான் போன்ற பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. அத்துடன் நான்கு பாடசாலைகளும் இருக்கின்றன. அமைக்கப்பட வேண்டிய இப்பாலமானது அமையப்பெற்றால் பிரதேச மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்விடத்தினைச் சென்று பார்வையிட்ட பாராதளுமன்ற உறுப்பினர் மற்றும் மன்கனாள் மாகாணசபை அமைச்சர் இதன் சராசரி அளிவீடுகளை மேற்கொண்டனர். பின்னர் இப்பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு: சென்று இதனை அமைப்பதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்துள்ளார்.






No comments