கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு சிறப்பு மிக்க மாங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் பஞ்சகுண்ட பஷி புனராவர்தக பம்புரோஷடண அஸ்டப்தன பிரதிஷ்டா மஹ கும்பாஷேகம் நாளை 05 திகதி வியாழகிழமை காலை இடம் பெறவுள்ளது
அந்த வகையில் நேற்று(03.07.2018) செவ்வாய்கிழமையும் இன்று புதன்கிழமையும்(04.07.2018) எண்ணெய்காப்பு சாத்துதல் ஆரம்பமாகியது.இதன் போது அடியார்கள் மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களான பலிபீடம் மூர்சிகம் சிவலிங்கம், பார்வதி,நகதம்பிரான், முருகன், நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர், மாரியம்மன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்தினர்.