குடி நீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் குழாய் கிணறுகள்

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் குடி நீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரும், லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் மாவட்ட இணைப்பாளருமான எஸ்.பரமானந்தமிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குழாய் கிணறுகள் அமைத்து புதன்கிழமை மக்கள் பாவனைக்கு கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் பேத்தாழை 2ம் குறுக்கு வீதியில் வசிக்கும் சாமுவேல் நாகலிங்கம் ஒரு மாற்றுத்திறனாளி, இவர்களுக்கு நீண்டகாலமாக குடிநீர் பிரச்சனை இருப்பதனை அறிந்து குடிநீர் வசதியை ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு முதல் கட்டமாக பேத்தாழை விஷ்ணு கோயில் வீதியில் வசிக்கும் செல்வகுமார் அருள்ஜோதி, நாசீவந்தீவு துர்க்கா முன்பள்ளி மாணவர்கள், மருதநகர் விவேகானந்தர் அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது

சுங்காங்கேணி 3ம் குறுக்கு தெருவில் வசிக்கும் சின்னத்தம்பி பூரணம் மற்றும் அவரது அவரது தங்கை ஆகிய இருவரும் கணவனை இழந்து இருவரும் ஒரு குடிசை வீட்டில் குடிநீர் பிரச்சனையுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த நிலையில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்புடன் இணைந்து லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பு பல்வேறு வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாக அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.பரமானந்தம் தெரிவித்தார்.