இருதயபுரம் புனித விசன் டி பவுல் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா


(லியோன்)  

மட்டக்களப்பு இருதயபுரம் புனித விசன் டி பவுல் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவின்  பரிசளிப்பு நிகழ்வு பங்கு தந்தை  அருட்பணி பேதுரு ஜீவராஜ் தலைமையில் இருதயபுரம் திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது
i

புனித விசன் டி பவுல் பாலர் பாடசாலையின் முன்பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை நிர்வாகம் , பங்குதந்தை ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட முன்பள்ளி பாலர்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாக பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது ,

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக தவிசாளர் எம் எ . அமீர்டீன் , சிறப்பு அதிதிகளாக கல்குடா பங்குதந்தை அருட்பணி ஜே எஸ் .மொறாயஸ் , அமிர்தகழி பங்குதந்தை    ஜி ஐ . ரெட்ணகுமார் ,  கிழக்குமாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியம் முகாமைத்துவ உதவியாளர் எப் .மலர்செல்வன் , மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியம் வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி .சோபனா மலர்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் பாலர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  ,பாலர்களுக்கான பரிசில்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்


நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் முன்பள்ளி பாலர்களின் 34வது  இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களின் மூன்று இல்லங்களையும்  புகைப்படம் மூலம் பிரதி செய்யப்பட்டு பாடசாலையின் முதல் ஞாபகார்த்த சின்னமாக   அதிகளினால் கையெழுத்து இட்டு பாலர் பாடசாலையின் முதல் நினைவு சின்னமாக அறிமுகப்படுத்த பட்டமை குறிப்பிடத்தக்கது