பொதுமக்களுக்கும் ,மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகம்


(லியோன்)


நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
  .
 தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாகான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன   


மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினை  கட்டுபடுத்துவதற்காக  மாவட்ட ரீதியில் அரச திணைக்களங்கள் , அசரசார்பற்ற , நிறுவனங்கள் , பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஊடாக  விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


மட்டக்களப்பு  வை எம் சி எ நிறுவனம் ,. மட்டக்களப்பு சமுதாய சார் சீர்த்திருத்த திணைக்களம் மற்றும் மது பாவனை மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஆகியன இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விசேட விழிப்புணர்வு நடவடிக்கையினை  முன்னெடுத்தனர்


இதன் கீழ் மட்டக்களப்பு  வை எம் சி எ நிறுவனம் ,. மட்டக்களப்பு சமுதாய சார் சீர்த்திருத்த திணைக்களம் மற்றும் மது பாவனை மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய உத்தியோகத்தர்கள் ,இளைஞர் யுவதிகள் இணைந்து மட்டக்களப்பு நகரில் பொதுமக்களுக்கும் ,மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகங்களும்  ,மற்றும் விழிப்புணர்வு இஸ்டிகர் ஓட்டும் நடவடிக்கையினையும்   மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்தனர்