மாகாண மட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்கள் முதலிடம்


(லியோன்)

மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட கரம் போட்டியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாணவர்கள் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில்  முதல் இடத்தினை பெற்றுள்ளனர்


கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட கரம் போட்டியில் மாகாணத்தை பிரதிநிதித்துவ படுத்தி 30 பாடசாலைகள் கலந்துகொண்டனர்

இதில் மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களில்  இருந்து கலந்துகொண்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  மஞ்சந்தொடுவாய்  பாரதி வித்தியாலயத்தில் இருந்து 17 வயத்துக்கு கீழ் ஆண்கள்  பிரிவில் கலந்துகொண்ட மாணவர்கள் போட்டியில் வெற்றிப்பெற்று மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர்

மாகாண மட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலைகளுக்கிடையில்  வெற்றிபெற்று  மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் , கல்வி வலயத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலையில் நடைபெற்றது .

பாடசாலை அதிபர் கே .முரளிதரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு  நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்