மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் அளப்பரிய சேவை.

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  இரத்ததான நிகழ்வு ஒன்று,  இன்று 09.07.2018 திங்கட்கிழமை  இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வருடாந்தம் இரத்ததானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது , அந்த வகையில் இந்த வருடத்துக்கான இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கல்லூரியில் தொழிற்பயிற்சிகளை கற்கும் மாணவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.