பாரத் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்.
(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு கிராமத்தில் இன்றைய தினம் மாபெரும் சிரமதானம் இடம்பெற்றது.

இந்த சிரமதானம்  நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது

பாரத் விளையாட்டு மைதானம்,
நாவற்காடு நாமகள் வித்தியாலயம், சித்தி விநாயகர் ஆலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
இந்த சிரமதானத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.