விளாவட்டவானில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம வீடமைப்பு திட்ட அடிக்கல் நாட்டு வைபவம்.
(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் இன்று (24.07.2018) தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி கிராம வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது.

இந்த மாதிரி கிராமத்தில் 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது ஒரு வீட்டுக்கு 05 இலட்சம் ரூபாய் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட இருக்கின்றது.

இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு வைபவத்தில்
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் K.ஜெயநாதன்,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் S.சுதாகர்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.