தீக்கிரையான குடும்பத்தினை நேரடியாக சென்று நிலையினை அறிந்து நிதியுதவி


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பழுகாமம் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் வீடு மின்னொழுக்கினால் தீக்கிரையாகி முற்றாக சேதமடைந்திருந்தது. நாட்டின் அசாதாரண சூழ்நிலைகாரணமாக அக் குடும்பத்தின் தலைவன் 2006ம் ஆண்டு காணாமற்போயுள்ள நிலையில் தனது இரு குழந்தைகளுடன் அன்றாடம் தயிர் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வளர்த்து வந்த தாயின் கவலைக்கிடமான நிலையினை அறிந்து கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.

சகல உடமைகளும் தீக்கிரைக்கான நிலையில் காணப்பட்ட குடும்பத்தின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ரூபா 10,000.00 இனை உதவிப்பணமாக வழங்கியதுடன் அக்குடும்பத்தின் இவ் ஆண்டு (க.பொ.த)சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இரண்டாவது பிள்ளையின் கல்விச் செலவிற்காக அம் மாணவி உயர்தரக் கல்வியினை பூர்த்தி செய்யும்வரை மாதாந்தம் ரூபா 3000.00 இனை தருவதாகவும் உறுதியளித்திருந்தார். அத்தோடு சேதமடைந்த வீட்டினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.அம் மாணவி கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தினால் நடாத்தப்படும் (க.பொ.த)சாதாரணதர மாணவர்களிற்கான மாதபந்த இலவசக் கல்விக் கருத்தரங்குகளில் கலந்த கொள்ளும் மாணவி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.