மாநகர சபையினால் வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைக


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களை குறைக்கு வகையில் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன
.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ஆலோசனையுடன் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  கருவப்பங்கேணி , ஜ்யந்திபுரம் , நாவலடி , விஜெயபுரம் ,சின்ன ஊறணி  ஆகிய கிராம சேவை பிரிவுகளில் உள்ள பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

இந்த வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மாநகர சபை உறுப்பினர்கள் . சுகாதார பரிசோதகர் .மாநகர சபை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்