பாரம்பரிய விளையாட்டு விழாவினால் விழாக்கோலமானது விளாவூர்
(விளாவூர் நிருபர்)

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இன்று (20. 07. 2018)  பி.ப. 2.31 மணிக்கு விளாவட்டவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது .

இந்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விளையாட்டு நிகழ்வின்
பிரதம அதிதி
செ.சண்முகராஜா
தவிசாளர், மண்முனை மேற்கு பிரதேச சபை.
சிறப்பு அதிதிகள்
வே.வேல்ராஜசேகரம்
கணக்காளர்,
பிரதேச செயலகம், வவுணதீவு.
த.நிர்மலராஜ்
உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,
பிரதேச செயலகம், வவுணதீவு .
கௌரவ அதிதிகள்
த.மலர்செல்வன்
மாவட்ட கலாசார இணைப்பாளர்,
மாவட்ட செயலகம்.
கே.ராகவன்
அதிபர்
விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயம்.
இ.புஸ்பராஜ்
கிராம உத்தியோகத்தர்,
விளாவட்டவான்.
செ.சுசி
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
விளாவட்டவான்.
அழைப்பு அதிதிகள்
விளாவட்டவான் சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்.

இடம்பெற்ற விளையாட்டுக்கள்
* வட்டக்காவடி
* சங்கிலிப் பிங்கிலி
* கொத்திருக்கு கொத்து
* தெத்துகௌகோடு
* எவடம் எவடம்
* மொழிக் குண்டு
* சுரக்காய் இழத்தல்
* வார் விளையாட்டு
* பில்லி மட்டை விளையாட்டு
* கட்டைப் பந்து
* கப்பல்கோடு
* கிட்டிப் புல்லு
* சாரக் கிடுகிடு
ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன.