பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற திராய்மடு வீரபத்தினி அம்பாள் ஆலய தீமிதிப்பு உற்சவம்


(லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமை  மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு திராய்மடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்பாள்  ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு உற்சவம் பக்த அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.



மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள அம்மன் ஆலயங்களுல் அதிகளவில் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் திராய்மடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்பாள்  ஆலயமாக விளங்குகின்றது .

கடந்த 17. ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமாகி இன்று காலை மட்டக்களப்பு வாவியில் அன்னையின் சமுத்திர நீராடும் நிகழ்வு நடைபெற்று அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.


இந்த தீமிதிப்பு உற்சவத்தில்  அடியார்கள் தீயில் இறங்கி தமது நேர்கடன்களை  செலுத்திகொண்டனர்.


இந்த தீமிதிப்பு வைபவத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளின்  இருந்து பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து தமது வழிபாடுகளையும் நேர்கடன்களையும்  நிவர்த்தி செய்துகொண்டனர் .