இரவோடிரவாக வீதியில் இறங்கிய மட்டக்களப்பு மாநகர முதல்வர்

மட்டக்களப்பு நகரப்பகுதியில் வடிகாடிகான்களை தூய்படுத்தும் மற்றும் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நேற்று மாலை மட்;டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் திடீர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நகருக்குள் உள்ள வடிகான்களில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக நகருக்குள் வருவோரும் வர்த்தகர்களும் பெரும்; கஸ்டங்களை தினமும் எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுவரும் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நகர்ப்பகுதிக்குள் உள்ள சில உணவகங்களின் கழிவு நீர்கள் முறையற்ற வகையில் வடிகான்களுக்குள் செலுத்தப்படுவது தொடர்பில் இதன்போது கண்டறியப்பட்டது.

அத்துடன் நீர் வெளியேறிச்செல்லமுடியாத நிலையில் உள்ள வடிகான்கள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களைக்கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

இதன்போது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வடிகான்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக்கண்ட மாநகர முதல்வர் அவற்றினை உடைத்து வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டார்.

இந்த நடவடிக்கைகளின்போது மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான து.மதன்,சிவம்பாக்கியநாதன் ஆகியோர் இதன்போது பங்குகொண்டனர்.

இதன்போது எட்டுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் ஊடாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.