உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணிகள்


(லியோன்)

.உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.


இதற்கு அமைய நிலைபேறான வாழ்வுக்கு நிலையான சூழலை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் , கரையோரம் பேணல் திணைக்களம் ,சுற்றாடல் அதிகார சபை ,  மட்டக்களப்பு மாநகர சபை  ஆகியவற்றின்  அனுசனையின் கீழ் மட்டக்களப்பு டச்பார்  கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று   மேற்கொள்ளப்பட்டது .  

உலக சுற்றாடல்  தினத்தை முன்னிட்டு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையில்  நடைபெற்ற மட்டக்களப்பு டச்பார் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் பணியில்  மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் கரையோர  பாதுகாப்பு  திட்ட  இணைப்பாளர்  எ . கோகுலதீபன் , மாவட்ட செயலக  செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிகுற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,இராணுவ படையினர் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர