ஆளுமை மிக்க ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை பிரிவுல்களில்  வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த வருகின்றது


இதன் கீழ்  வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின்  ஏற்பாட்டில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர்கள்   120   பேருக்கு  மூன்று கட்டங்களாக ஆசிரியர்களுக்கான ஆளுமை மிக்க கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு  அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது ..

வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின்  சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி எல் ஆர் . டி லிமா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர்  செல்வி .அகிலா கனகசூரியம் , உதவி கல்விப் பணிப்பாளர்  கே . கரிகராஜ் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் . எ ஜெ. ராஜேந்திரன் ஜெகன்   மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் , வளவாளர்கள் அதிபர்கள் ,ஆசிரியர்கள் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்