அனைத்து தபால் ஊழியர்களின் தொழில் சங்க கவனயீர்ப்பு போராட்டம் நாளை மட்டக்களப்பில்


 (லியோன்)

மட்டக்களப்பு தபால் தொழில் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழில் சங்க கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தபால் தொழில் சங்க ஒன்றியத்தினரையும் கலந்துகொள்ளுமாறு  மட்டக்களப்பு மாவட்ட தபால் தொழில் சங்க ஒன்றியத்தின்  தலைவர்  எ .சுகுமார் அழைப்பு விடுத்துள்ளார் .


இலங்கை ஒன்றிணைந்த தபால் தொழில்சங்க முன்னணி ஏற்பாட்டில் அனைத்து  தபால் தொழில் சங்க ஒன்றியங்களினால் தபால் ஊழியர்களின் உரிமைக்கான பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11ஆம் திகதி மாலை 04.00  மணிமுதல் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திணை முன்னேடுத்து  வருகின்றனர்.

இந்தநிலையில் தமது தொழில் சங்க போராட்டத்திற்கு  வலுசேர்க்கும் வகையில் அனைத்து தபால் தொழில் சங்க ஒன்றியங்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டத்தினை நாளை மட்டக்களப்பு மாவட்ட தபால் தலைமை காரியாலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட தபால் தொழில் சங்க ஒன்றியத்தின்  தலைவர்  எ .சுகுமார் தெரிவித்தார் .
எனவே நாளை இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தபால் தொழில் சங்க ஒன்றியங்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு அவர்  விடுத்துள்ளார்