கிழக்குமாகாண ஆங்கில தின விழா


 (லியோன்)

ஜோன் கீல்ஸ் அரக்கட்டனை நிறுவனம்
2004 ஆண்டில் இருந்து நாடளாவிய ரீதியில் மக்களுக்கான சுகாதாரம் , கல்வி , சூழல் , சமூகம் ,கலை கலாசார போன்ற வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற வேளையில் இதனுடன் இணைந்ததாக  பாடசாலை மாணவர்களுக்கு உயர் தர ஆங்கில கல்வியையும்  இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பாத்திருக்கும் இளைஞர் ,யுவதிகளுக்கான  தொழிலுக்கான ஆங்கில கல்வியினை வழங்கி அதற்கான தேசிய தர சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது
,

அதற்கு அமைய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின்  பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் ,யுவதிகளுக்கான  ஆங்கில பாடநெறிகள் நடாத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

ஜோன் கீல்ஸ் அரக்கட்டனை நிறுவக சமூக சேவை அதிகாரி குமுது முனுசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் , மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் வடகிழக்கு  ஆள் இணைப்பு முகாமையாளர்  எ .நிரோசன் , மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர்  .பிரதீப்  வசந்த் மற்றும் மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர்