கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்


  (லியோன்)


சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோரினால் மட்டக்களப்பு கல்லடி பாலம் சந்தை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது



மட்டக்களப்பு மாவட்ட ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் மாவட்ட கிராமப்புற விவசாய தொழில்துறையின்  சமூக நிறுவனங்களை முன்னேற்றுவதும் நிலைத்து நிற்பதற்குமான திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு உற்பத்தியாளர்களின் அனுபவங்களையும் சிறந்த தொழில் முறைமைகளையும் ஏனைய சேவை வழங்கும் பங்குதாரர்களுடன் தொடர்புபட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான தளத்தினை உருவாக்குவதுடன் கைத்தறி நெசவு பொருட்களை கட்சிபடுத்துவதன் ஊடாக சந்தை வாய்ப்பினையும் விற்பனையும் அதிகரித்தல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


இதன் கீழ் அக்கரைப்பற்று பெண்கள அபிவிருத்தி அறக்கட்டளை நிறுவன தலைவர் கே .தில்லையம்மா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு கல்லடி பாலம் சந்தை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது


இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட சிறிய மற்றும்  நடுத்தர கைத்தறி கண்காட்சியினையும்   விற்பனையினையும் ஆரம்பித்து வைத்தனர்


இந்நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி . என் .சத்தியானந்தி , மாவட்ட தொழில் துறை திணைக்கள உதவி பணிப்பாளர் கே .இளம் குமுதன் , மாவட்ட ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்சி திட்ட இனைப்பாளர்  ஆர் . சிவாகரன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ்  மற்றும் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , சிறிய  நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்