தேசிய வரி நடைமுறை தொடர்பில் தெளிவுபடுத்தலும் சிறந்த வரியிறுப்பாளர் கௌரவிப்பும்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய வரி நடைமுறை தொடர்பில் தெளிவுபடுத்தலும் சிறந்த வரியிறுப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இறைவரித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நேற்று காலை முதல் மாலை வரையில் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் வரியிறுப்பாளர்களுக்கான தெளிவுபடுத்தல்கள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வரியிறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் திருமதி முனசிங்க,சிரேஸ்ட ஆணையாளர்களான கப்புஹாராச்சி,எம்.எல்.எம்.தாஹீர்,யாழ் மாவட்ட இணைவரித்திணைக்களத்தின் ஆணையாளர் பந்துல ஹப்பு தந்திரிகே உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய வரி தொடர்பான தெளிவுபடுத்தலை தொடர்ந்து நேற்று மாலை சிறந்த வரியிறுப்பாளர்கள் தங்க,வெள்ளி அட்டைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தங்க அட்டைகளை 20 வரியிறுப்பாளர்களும்,31வரியிறுப்பாளர்கள் வெள்ளி அட்டைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.