நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது


 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ,மாநகர சபை முதல்வர் , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வலயக்கல்விப் பணிப்பாளர்கள் .இளைஞர்கள்  ,யுவதிகள் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கிடையில் மாவட்ட பல்சமய பேரவையின் செயற்பாடுகள் மற்றும்   நல்லிணக்க தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது .


மாவட்ட சர்வமத பேரவையின் ஒழுங்கமைப்பில் தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இதன் போது  மாவட்ட பல்சமய பேரவையின் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட கடந்த கால செயல்பாடுகள் தொடர்பாக அரச அதிபர் ,மாநகர சபை முதல்வர் , பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வலயக்கல்விப் பணிப்பாளர்கள் .இளைஞர்கள்  ,யுவதிகள் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள் விளக்கமளிக்கப்பட்டு இது தொடர்பான கருத்து கலந்துரையாடல் இடபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், சர்வமத தலைவர்கள் , , வாழைச்சேனை , ஏறாவூர் பிரதேச சபை ,மண்முனை தென் எருவில் பற்று ,கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் , இளைஞர்கள்  ,யுவதிகள் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட பல்சமய பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்